சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு என்று தனி சிறப்பு வாய்ந்த தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் முதலில் கலக்கப்போவதுயாரு சிரிச்சா போச்சு போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் காமெடிக்காக நடத்தி வந்தனர். அதை மக்கள் பெரிதும் விரும்பி பார்க்க ஆர்வம் காட்டியதை அடுத்து தற்பொழுது அதில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். பின்பு குக் வித் கோமாளி என்ற சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்த சில பிரபலங்கள் மற்றும் சமையல் தெரியாத சில காமெடியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர் அதில் புகழுடன் இணைந்து பாலா, சிவாங்கி, மணிமேகலை போன்றோர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இவர்களது காமெடி மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்தது. இதனால் இந்த நிகழ்ச்சியும் செம ஹிட் ஆக ஒளிபரப்பானது. குக் வித்து கோமாளி தொடர்ந்து இரண்டு சீசன்களில் புகழ் கலந்து கொண்டார். ஆனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள மூன்றாவது சீசனில் புகழ் கலந்து கொள்வாரா இல்லையா என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர்.
ஏனெனில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழுக்கு வெள்ளித்திரையில் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்பொழுது கூட சந்தானம் உடன் இணைந்து சபாபதி என்ற திரைப் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியானது. மேலும் இது போல பல டாப் ஹீரோக்கள் படத்தில் இணைந்து
இந்த நிலையில் புகழுக்கு இன்று பிறந்தநாள் அதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் புகழுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழுக்கு வாழ்த்து கூறிய ஆடியோவை புகழ் தனது சமூக வளைதளப் பக்கத்தில் பகிர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
#rajini #actor pic.twitter.com/clyf5e1odM
— Tamil360Newz (@tamil360newz) November 14, 2021