Super star Rajini: தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறகு யார் சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி சமீபத்தில் நடித்து முடித்துள்ள ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 70 வயது வரை இதுபோல் நடித்துவிட்டு அப்புறம் வாங்க சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு என ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் என்னதான் உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது என்பது போல் காக்கா கதை கூறி சூப்பர் ஸ்டாருக்கு அடித்துக் கொள்ளும் பலருக்கு பதிலடி கொடுத்தார். இதற்கு முன்பே அனிருத் பாடல் மூலம் சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு பல வார்த்தைகளை பாடலில் சேர்த்து பதிலடி கொடுத்தார்.
இப்படி சூப்பர் ஸ்டார் பிரச்சனை பூத கரமாக வெடித்ததற்கு காரணம் யார் என்று யோசித்துப் பார்த்தீர்களா. விஜய்க்கு கடைசியாக வெளியாக்கிய திரைப்படம் வாரிசு இந்த வாரிசு திரைப்படத்தின் நிகழ்ச்சியில் தான் நடிகர் சரத்குமார் அவர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் எனக்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சரத்குமார் அவர்கள் ரஜினியை தாக்குவதற்காக தான் கூறினார் என பலரும் விமர்சனம் செய்தார்கள் அந்த சமயத்தில்.
இந்த விஷயம் பூதகரமாக வெடிக்க உடனே சரத்குமாரை பார்த்த மீடியா நபர்கள் சரத்குமார் இடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி இருக்கும்பொழுது நீங்கள் எப்படி கூறினீர்கள் என கேட்க அதற்கு சரத்குமார் மிகவும் கோபமாக சூப்பர் ஸ்டார் பெருசா சுப்ரீம் ஸ்டார் பெருசா என மீடியாவை பார்த்து கேள்வி எழுப்பினார்.
சரத்குமார் கொளுத்தி போட்ட தீதான் இன்று காட்டுத் தீ போல் பரவி வருகிறது. சினிமாவில் உள்ள நடிகர்கள் யார் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசைப்படுகிறார்கள் இரண்டாம் இடத்தில் இருக்கும் நபர்களைப் பற்றி கொஞ்சம் கூட யோசிப்பதே கிடையாது அதேபோல் முதலிடம் மட்டுமே வேண்டும் என நினைக்கிறார்கள் இரண்டாவது இடம் என்பதை இப்பொழுது உள்ள நடிகர்கள் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். காலப்போக்கில் இந்த நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது