தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகிய நிலையில் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதனை அடுத்து வாரிசு படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தை முடித்த விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தற்போது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் இருவரும் இணை இருக்கிறார்கள் இதனால் தளபதி 67 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏனென்றால் இந்த படம் எல்சியுவில் இணைய உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் கைதி மற்றும் விக்ரம் படத்தின் தொடர்கதையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜை போடப்பட்டது.
ஆனால் பூஜை போடப்பட்ட புகைப்படம் இன்னும் வெளியாகவில்லை வாரிசு படம் வெளியான பிறகு தான் தளபதி 67 திரைப்படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் ஒரு பொது நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார் அதனை தொடர்ந்து தளபதி 67 படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் தற்போது சிறப்பான ஒரு செய்தி கிடைத்துள்ளது.
அதாவது தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பூஜையுடன் தொடங்கிய புகைப்படத்தையும் படப்பிடிப்பு துவங்கிய புகைப்படத்தையும் பட குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிகர் கமல் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இருக்குமா என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை ஆனால் கடைசி ஐந்து நிமிடத்தில் திரையரங்கையை தெறிக்க விட்ட ரோலக்ஸ் கதாபாத்திரம் தளபதி 67ல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.