கோவில்பட்டி அடுத்து உள்ள சாத்தான்குளத்தில் நடந்த தந்தை மற்றும் மகன் இருவரின் மரணத்தால் தமிழகம் மட்டுமல்லாமல் உலகமே கொந்தளித்துப் போய் இருக்கிறது. அதனால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சாத்தான்குளத்தில் சேர்ந்தவர் ஜெயராஜ் 59 வயது அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் 31 வயது பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள்.
கடந்த 19ஆம் தேதி ஜெயராஜ் அவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததால் காவல்துறை அதிகாரிகள் கண்டித்தார்கள் பின்னர் காவல்துறை அதிகாரி தந்தை மற்றும் மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கினார்கள் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதில் தந்தை மகன் இருவருமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிரிழந்தார்கள்.
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதனால் பல பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தார்கள் அது மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்களும் நடிகர் நடிகைகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து 12 நாள் கழித்து தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகவும் கோபத்துடன் கருத்தை தெரிவித்துள்ளார், ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த சம்பவத்திற்கு நீதிகேட்டு வலியுறுத்தி வருகிறது. அதனால் இந்த வழக்கை உச்சநீதிமன்றமே தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை நீதிமன்றத்திற்கு ஆதரவாகவும் நீதியை வலியுறுத்தும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார், அதில் அவர் கூறியதாவது, தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும் விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ஒரே ஒரு ட்வீட் மிகப்பெரிய வைரலாகி வருகிறது, இதைப் பார்த்த பலரும் கருது தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சிலர் விமர்சனங்களையும் எழுப்பி வருகிறார்கள் ஏனென்றால் இது நடந்து 12 நாட்கள் ஆகிய நிலையில் இப்பொழுது என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரஜினியின் கருத்திற்கு c.s. அமுதன் கிண்டலாக பதிவிட்டுள்ளார், சிஎஸ் அமுதன் கூறியதாவது ஆட்டோ சங்கர் தொடர்ச்சியாக பல்வேறு கொலைகளை செய்து வருவதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த சீரியல் கொலைகாரன் ஆட்டோசங்கர் கடந்த 1995ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
I am truly distressed & shocked that a serial killer called Auto Shankar has been killing many people in the city.
— CS Amudhan (@csamudhan) July 1, 2020
சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி தாமாகவே முன்வந்து மிகவும் லேட்டாக கருத்து தெரிவித்ததால் இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறார் என ரசிகர்கள் பலரும் தெரிந்து கொண்டார்கள், இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாமல் உடனடியாக கருத்து தெரிவிக்க மாட்டார் அதே போல்தான் இந்த விஷயத்துலயும் எது உண்மை எது பொய் என ஆராய்ந்த பிறகே கருத்து தெரிவித்துள்ளார் ஆனால் இதை அமுதன் கிண்டல் செய்துள்ளது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.