ரஜினி சம்பளமாகா வெறும் 30000 தான் வாங்கினார், ஆனால் அப்பொழுது ராமராஜன்..? தயாரிப்பாளர் சொன்ன அதிரடி தகவல்

ramarajan-with-rajini-tamil360newz
ramarajan-with-rajini-tamil360newz

தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கலர்கலரான சட்டையின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்த நடிகர் என்பது நாம் அறிந்ததே.இவர் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த நம்ம ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.அந்தவகையில் இவர் நடித்த படங்களான கரகாட்டக்காரன், கிராமத்து மின்னல், ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவல்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் மூலம் மற்ற நடிகர்களுக்கு சவால் விட்டார் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராமராஜன் வாங்கிய சம்பளம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஏ. எல். அன்பழகன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவுலகில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏ எல் விஜய் என்பது குறிபிடத்தக்கது. இவர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய மகன்கள் தற்போது சினிமா உலகில் தற்போது கால்தடம் பதித்து தன்னை வளர்த்துக்கொண்டு வருகின்றனர் அந்த வகையில்  ஏ எல் விஜய் மற்றும் உதயாஆகியோர் அவருடைய மகன்கள் ஆவார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ராமராஜன், ரஜினிகாந்த் சம்பளம் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியிருந்தது ராமராஜன் அவர்கள் ஒரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் அப்போது ரஜினிகாந்த் வெறும் 30,000 மட்டுமே வாங்கினார் ஆனால் இப்பொழுது ராமராஜன், ரஜினியின் நிலைமை என்ன இதுதான் சினிமா எதையும் நம்மால் கணித்து சொல்ல முடியாது யாருக்கு நேரம் நல்லா இருக்கோ அவருடைய மார்க்கெட் சினிமாவில் உயர்ந்து, அவருடைய சம்பளம் அதிகமாகும் என கூறினார்