தமிழ் சினிமா உலகில் ஏராளம் திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடித்திருந்த திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் கண்டிப்பாக பெற்றிருக்கும்.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்ததிரைப்படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு ஏற்க நிற்கிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதனையடுத்து ரஜினியின் திரை வாழ்க்கை பயணம் முடியப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அதாவது ரஜினி சமீபத்தில் அரசியலில் ஈடுபடுவதாக அதிகாரபூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார்.
மேலும் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து வேற எந்தவொரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது ரஜினி அரசியலில் முழுமையாக ஈடுபடுவார் என்பது தெரிய வருகிறது மேலும் அவரது திரைப் பயணம் தொடருமா தொடராதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த தகவல் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.