சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி பல திரைப்படங்களில் பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் திரைப்படத்தில் அமைந்துள்ள “ஏ என்ன மச்சான் சொல்லு புள்ள” பாடலை பாடிய பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அமைந்துள்ள “சாமி” பாடலை பாடியுள்ளார். இந்த பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் ராஜலட்சுமி அவருடைய கணவர் செந்தில் ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச்சுற்று வரை சென்று முதல் பரிசை தட்டிச் சென்றனர். கிராமத்து சாயலில் பாடும் இவருடைய பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் என்றே சொல்லலாம்.
டிவி ஷோவில் பாடி வந்த ராஜலட்சுமி, செந்தில் இருவருமே திரைப்படங்களிலும் பாட ஆரம்பித்தனர் அதன் பின்னர் செந்தில் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.அதேபோல பல படங்களில் பாடல்களை பாட்டியும் வருகிறார். தன் கணவரை போல பாடகி ராஜலட்சுமி தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ராஜலட்சுமி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ராஜலட்சுமி நடிக்கும் படத்திற்கு லைசன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஜலட்சுமி ஒரு ஆசிரியராக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அநீதி நடக்கும்போது அதுவும் அப்பெண் ஆசிரியராக இருக்கும் போது ஏதாவது செய்யத் தோன்றும். இந்த ஆசிரியரை சுற்றி நடக்கக்கூடிய கதை தான் லைசன்ஸ் படம் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தன்னுடைய மனைவி முதன் முதலாக திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் செந்தில் ராஜலட்சுமிக்கு பலவிதமாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்.
இதோ லைசன்ஸ் பட போஸ்ட்டர்..