மார்டன் உடையில் மல்லிகை பூ வைத்துகொண்டு சைடு போஸ்ஸில் கலக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி.! வைரலாகும் புகைப்படம்

pragathi-1

விஜய் டிவியில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.  ஜூனியர், சீனியர் என தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான ஏராளமானோர் தற்பொழுது வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் பரிசை தட்டிச் சென்றவர் தான் பாடகி பிரகதி. இவரின் சிறந்த குரல் வளத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பாலா இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தாரை தப்பட்டை படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் பாடியிருந்தார் இந்த பாடல் அமோக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இதுவரையிலும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.  மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட இவர் இதனை காரணமாக வைத்து கொண்டு ஆண் நண்பர்களின் நட்பை அதிகளவில் கைவசம் வைத்துள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது மாடர்ன் உடையில்  தலை நிறைய மல்லிகை பூவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

super-singer-rpragathi
super-singer-rpragathi