புதிதாக கார் வாங்கியுள்ள சூப்பர் சிங்கர் பூவையார்.! எத்தனை லட்சம் தெரியுமா.?

poovaiyar
poovaiyar

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக இந்த தொலைக்காட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதற்காக பலரும் வாய்ப்பு தேடி வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரும் சினிமாவில் பிரபலமடைந்து இருக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் விஜய் டிவி பொதுவாக திறமை இருக்கும் சாதாரண மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வருகிறது இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுடைய வாழ்க்கையை வெற்றி பெற்ற பலர் உள்ளார்கள்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் பூவையார் இவர் விஜய் டிவியின் மூலம் சிங்கராக அறிமுகமாகி பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடலுக்கு பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடலில் பாடி பிறகு நடனமும் ஆடியிருந்தார் இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து பாடி தற்பொழுது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இவ்வாறு அந்த காருடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள் அதாவது பூவையார் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லையே நான் இல்லை உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு எப்பொழுதுமே இருக்கணும் தேங்க்ஸ் டு ஆல் அண்ட் தேங்க்ஸ் டு காட் எல்லா புகழும் ஆண்டவனுக்கு என தெரிவித்துள்ளார்.

poovaiyar
poovaiyar

மேலும் பூவையார் வாங்கியுள்ள இந்த கார் டாட்டா மோட்டார்ஸ் பன்ஸ் (TATA punch) நிறுவனத்தின் காராகும். இந்த கார் சுமார் 5.93 லட்சம் ரூபாய் முதல் 9.49 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறதாம். இவ்வாறு பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய கடின உழைப்பினால் பூவையார் கார் வாங்கியது குறித்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.