சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் பல கலை வல்லுனர்களை வெள்ளித்திரை அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் நடிகர், நடிகைகள், காமெடியன்கள், பாடகர்கள் என பல துறையிலும் விஜய்டிவி பிரபலங்கள் பயணித்து வருகின்றனர். அப்படி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் என இரண்டாகப் பிரித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என தனித்தனியாக நடத்தி வருகின்றனர் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நடந்து வந்தது இதனை தொகுப்பாளர் மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சியின் பைனல் எபிசோட் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு பைனல் நிகழ்ச்சியிலும் பிரபல பாடகர்கள் இசையமைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். நேற்று நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த இறுதி நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் நேஹா பெற்றார் இவருக்கு 3 லட்சம் பணமும் ஐந்து சவரன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் ரிஹானா பிடித்திருந்தார். இவருக்கு ஐந்து லட்சம் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக கிரிஷாங் வெற்றி பெற்றார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா கையால் கொடுக்கப்பட்டது மேலும் சினிமாவில் யுவன் ஷங்கர் ராஜா அவரது இசையில் பாட கிரிஷான்க்கு வாய்ப்பு ஒன்று கொடுத்தார்.