தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலரும் விரும்பி பார்த்து வரும் ஒரு நிகழ்ச்சியாகும். அந்த வகையில் தற்போது வரை பிக் பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஐந்து சீசன்களிலும் வெவ்வேறு துறையில் இருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்து தற்போது சினிமா மற்றும் அவரவர் துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கூடிய விரைவில் இந்த வருடத்திற்கான பிக் பாஸ் ஆறாவது சீசனும் தொடங்க உள்ளது. ஒரு பக்கம் ஆறாவது சீசன்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். மறுபக்கம் பிக் பாஸ் ஆறாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற குழப்பமும் இருந்து வருகிறது
ஏனென்றால் கமல் தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் அதனால் பிக் பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது இரண்டு மூன்று போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
அப்படி அடுத்து வரவுள்ள சீசனிலும் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்ஷன் பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியது.
அவரைத் தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படியும் விஜய் டிவி பிரபலமே இரண்டாவதாக பிக் பாஸ் வீட்டில் நுழைய உள்ளனர். ஆம் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் குழு இதற்கான பேச்சுவார்த்தையை தற்போது ராஜலட்சுமி இடம் நடத்தி வருகிறதாம்.