விஜய் டிவி தொலைக்காட்சி பல புது புது நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டு வருகிறது. அதில் சில நிகழ்ச்சிகள் மட்டும் மாபெரும் வெற்றி அடைகின்றன அதுபோல் வெற்றி அடையும் நிகழ்ச்சிகளை சீசன் சீன்னாக தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகின்றது. பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சிகளை சீசன் செய்ததாக தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன.
அதுபோல் இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாகும் இந்த நிகழ்ச்சியையும் சீசன் சீன்னாக தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றனர். தற்போது வரை 8 சீசன்கள் முடிவடைந்துவிட்டன. இதில் ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 15 பேருக்கும் மேலாக கலந்து கொள்வார்கள் மற்றும் சிறியவர்கள் பெரியவர்கள் என தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதில் வாரம் வாரம் பாட்டு போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களில் வருபவர்க்கு பரிசுகளும் அளிப்பார்கள் கடைசியாக முதல் பரிசுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்குவார்கள். இதில் சூப்பர் சிங்கர் 6 வது சீசனில் செந்தில் ராஜலட்சுமி எனும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் ஆரம்பத்தில் பாடல்களையே பாடி மக்களை தன்பக்கம் ஈர்த்தனர்.இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவரும் உலக அளவில் ரீச் ஆனார்கள்.
அதுமட்டுமல்லாமல் அந்த சீசனில் செந்தில் முதலிடத்தைப் பிடித்து 50 லட்சம் மதிப்புள்ள வீடும் பெற்றார். ராஜலட்சுமி மக்கள் நாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். பின்பு அதன் மூலம் இவர்கள் இருவருக்கும் வெள்ளித்திரையில் டாப் நடிகர்களான அஜித், பிரபுதேவா, சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களின் படங்களிலும் பல பாடல்களைப் பாட வாய்ப்புகள் கிடைத்தன.
தற்போது இவர்கள் இருவரும் சீரியலில் நடிக்க வந்துள்ளாராம். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் ஆகும் அந்த சீரியலின் நடிகர் நடிகைக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது செந்தில் ராஜலட்சுமி இருவரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடிக்க வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. அவர்கள் இருவரும் அந்த சீரியல் நடிகருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நவராத்திரி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் அவர்கள் பாட வந்திருப்பார்கள் என கூறப்படுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.