பீஸ்ட் படத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்த்து தளபதி விஜய் சுறுசுறுப்பாக நடித்துவரும் திரைப்படம் தான் வாரிசு.. இந்த படம் அவருக்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜூ மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, மீனா, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்க மறுப்பக்கம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து அண்மையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலையும் ரிலீஸ் செய்தது. இந்த பாடல் தற்போது youtube – ல் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கும் இந்த பாடல் ரொம்பவும் பிடித்துள்ளது. இதை படத்தில் பார்க்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் மற்றும் வாரிசு படம் குறித்து நடிகை குஷ்பூ சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகை குஷ்பூ சொன்னது.. சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென நடிகர் விஜய்க்கு காய்ச்சல் வந்துவிட்டது.
தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறி சூட்டிங்கை நிறுத்தினால் டெக்னீஷன்கள் மற்றும் மற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் சண்டை காட்சி முடியும் வரை விஜய் நடித்தார். சினிமா மீது அவ்வளவு காதல் கொண்டவர் என்று கூறினார் மேலும் தளபதி விஜய் பற்றி குஷ்பூ சொன்ன இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பரவி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.