வனிதாவின் கதவை தட்டும் பட வாய்ப்புகள்.! அடுத்ததாக சாக்லெட் பாய் நடிகருடன் சேர உள்ளாராம்.! சூப்பர் தகவல்..

சமீப காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்புகளை கொட்டி கொடுக்கின்றனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

அந்த வகையில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் விஜயக்குமாரின் மகள் வனிதா அதன்பின் சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார்.

அதிலிருந்து எந்த ஒரு மீடியோ வெளிச்சத்திலும் காணப்படாத இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கண் பார்வையில் தேன்பட்டார். அன்றிலிருந்து இன்று வரையிலும் இவரை ஏதோ ஒரு காரணத்தினால் பிரபலம் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்.

இப்படி இருந்த நிலையில் இவருக்கு தற்போது படவாய்ப்புகளும் ஒரு பக்கத்தில் கதவைத் தட்டி கொண்டுவருகின்றன.

சமீபத்தில் பாம்பு சட்டை, அனல் காற்று ஆகிய படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது 2k அழகானது காதல் என்ற ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதைத் தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் உருவாக உள்ள அந்தாதூன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் தற்போது நடிக்க ரெடியாகி உள்ளார்.

prashanth
prashanth

அதை உறுதிபடுத்தும் வகையில் சமிபத்தில் பிரசாந்த் இப்படம் குறித்து பதிவிட்டார் இது குறித்து பதிவு செய்த வனிதா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் விரைவில் படத்தில் வந்து நடிக்கிறேன் என குறிப்பிட்டார் இதனால் இப்படத்தில் அவர் கமிட்டாகி உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

இத்திரைப்படத்தை தியாகராஜன் அவர்கள் இயக்கவுள்ளார். இடுப்பழகி  சிம்ரன் வில்லியாக அவதாரம் எடுத்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.