அஜித் நடிக்க வேண்டிய படத்தில் சத்யராஜ் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் எது தெரியுமா.?

ajith sathyaraj
ajith sathyaraj

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ஆனால் ரசிகர்களின் நலனுக்காக ரசிகர் மன்றத்தையே கலைத்தார் தல அஜித், ஆனாலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

சமீபகாலமாக தல அஜித்தின் திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகின்றன ஆனால் ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான், ஆனால் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் மீண்டு வந்து விடுவேன் என சாதித்து காட்டியவர்.

இந்த நிலையில் அஜித்திற்காக எழுதப்பட்ட கதையில் வேறு ஒரு நடிகர் நடித்து ஹிட்டான கதை நிறைய பார்த்துள்ளோம் அந்த வகையில் தல அஜீத்துக்காக எழுதிய கதையில் புரட்சித் தமிழன் சத்யராஜ் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படத்தின் ரகசியத்தை அப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் கூறியுள்ளார்.

சத்யராஜ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் என்னம்மா கண்ணு, இந்த திரைப்படம் 2000ம் ஆண்டு வெளியாகியது இந்த படத்தில் சத்யராஜ் தேவையாணி வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள், தேவா இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் தான் சக்தி சிதம்பரம்.

ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலாக அஜித்திற்காக தான் எழுதினாராம் அதுவும் அஜித்திற்காக மன்மதன் என்ற தலைப்பில் உருவாக்கினாராம், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் பணியாற்ற முடியவில்லையாம் பிறகுதான் சத்யராஜ்  இந்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி கொடுத்தார். பிறகு சத்யராஜின் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.