சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி இவர் பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் காமெடி நடிகராக நடித்து வந்தது மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாக நடிக்கவும் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவருடைய விடுதலை படப்பிடிப்பிற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக நடிகர் சூரி முன்னணி நடிகர்களுக்கு நண்பராகவும் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் இவருக்கு வழக்கமான கதாபாத்திரமாக இருந்தது ஆனால் தற்போது இவர் நாயகனாக நடிப்பதன் மூலமாக பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது மட்டுமில்லாமல் அவர் நடிக்கும் திரைப்படத்திற்கு விடுதலை என பெயர் வைத்தது வித்தியாசமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய படப்பிடிப்பு முடிந்துவிட்டது என விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வந்தன.
அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்னவென்றால் அவர் ஒரு போராளியாக நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தன்னுடைய காட்சிகள் முடிவடைந்த நிலையில் அவர் பாலிவுட் திரை படத்தில் பிஸியாக இருப்பது மட்டுமில்லாமல் சமீபத்தில் மீண்டும் திரைப்படத்தில் உள்ள மீதமுள்ள வேலையை செய்ய வந்துள்ளார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை தனுஷின் அசுரன் திரைப்படம் இயக்கி மாபெரும் வெற்றி கண்ட வெற்றிமாறன் அவர்கள்தான் இயக்கிவருகிறார் மேலும் இந்த திரைப்படத்தினை குமார் என்பவர் தான் எடுத்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் மலைவாழ் மக்கள் தொடர்பான கதையாக இருப்பதன் காரணமாக சிறுமலை அருகே அடர்ந்த காட்டிற்குள் மிகப்பெரிய கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட சினிமா ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு பல்வேறு விஷயங்கள் இருப்பது மட்டுமில்லாமல் அங்கு தங்கியிருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் அங்கு பல்வேறு விலங்குகள் பூச்சிகள் போன்றவற்றிற்குகிடையே படக்குழுவினர்கள் சிக்கி தவித்து உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது