ஆதிபுருஷ் படத்தில் சன்னி சிங்கின் சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

adipurush
adipurush

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது அந்த வகையில் பிரபாஸ் நடித்த பாகுபலி, பாகுபலி 2, ராதே ஷியாம் போன்ற படங்களை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் ஜூன் 16ஆம் தேதி..

தெலுங்கு ஹிந்தி தமிழ் கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீசானது. ஆதிபுருஷ் படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார் பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் சையத் அலி கான் நடித்துள்ளார் மற்றும் நடிகர் சன்னி சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

3டி படமான இதனை டி – சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சன்னி சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் அவர் இந்த படத்தில் நடிக்க சுமார் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் ப்ராஜெக்ட் கே, சாலர், ஸ்பிரிட் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் அவருடைய சம்பளம் இன்னமும் உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.