இயக்குனர் ஆர்.யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷாகுப்தா, ஜி பி முத்து, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கோஷ்ட திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஓ மை கோஷ்ட படத்திற்காக தற்போது பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஓ மை கோஷ்ட் படத்தில் நடித்த சன்னி லியோன், ஜி பி முத்து, சதீஷ், தர்சா குப்தா, உள்ளிட்டோர் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது மேடையில் நடிகை சன்னி லியோன் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பறக்கும் கிஸ் கொடுத்தது போல நடிகை சன்னி லியோனி கிஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அதாவது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான கிஸ் கொடுத்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது மட்டுமல்லாமல் அந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அதேபோல தற்போது ஓ மை கோஷ்ட படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சன்னி லியோன் விஜய் போலவே அப்படியே கிஸ் கொடுத்து உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க டிக் டாக் மற்றும் பிக் பாஸ், youtube மூலம் பிரபலமான தலைவர் ஜி பி முத்து ஒரு பக்கம் மேடையில் மரண குத்தாட்டம் ஆடிய வீடியோவும் செம வைரல் ஆகி வருகிறது.
சன்னி லியோனுடன் நடித்தது மட்டுமல்லாமல் அவருடன் குத்தாட்டமும் ஆடி ரசிகர்களை உற்சாக கடலில் ஆழ்த்தியுள்ளார் ஜி பி முத்து. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருவது மட்டுமல்லாமல் என்னா மனுஷன்யா நல்லா வாய்ப்பாவே கிடைக்குது என்று கூறி வருகின்றனர்.