எனக்கு குரு என்றால் அது சன்னி லியோன் தான்.! வாடகை தாய்க்கு குறித்து இப்படி ஒரு காரணமா

sunny leone-nayanthara
sunny leone-nayanthara

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த இருந்தாலும் ஐயா திரைப்படத்தின் மூலம் அனைவரும் அறியப்பட்டார். அதன் பிறகு தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித்,  சிம்பு, உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் நடிகை நயன்தாரா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அப்படி இவர் நடிப்பில் வெளியான O2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார் நடிகை நயன்தாரா. அதன் பிறகு நாங்கள் இருவரும் திருமணம் செய்ய போவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள் இதனால் ரசிகர்கள் எப்போது அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்து இருந்தார்கள்.

பின்னரே இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் நடைபெற்ற முடிந்தது. இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாலமாக நடைபெற்றது அது மட்டுமல்லாமல் இவர்களுடைய திருமணத்தின் போது எந்த ஒரு புகைப்படம் வெளிவராமல் இருந்தது இதனால் எப்போது அவர்களுடைய புகைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் ஹனிமூன் சென்று விட்டார்கள் ஹனிமூன் சென்று முடித்தவுடன் படங்கலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் புது படங்களில் எதிலும் நடிக்க போவதில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் இரண்டு குழந்தைக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நயன்தாராவிற்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் தானே ஆகிறது அதற்குள் எப்படி குழந்தை பெற்றார் என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தமிழ் சினிமாவில் புதிதாக இருந்தாலும் பாலிவுட் பிரபலங்கள் நிறைய பேர் இவ்வாறு செய்து உள்ளார்கள். அதாவது கவர்ச்சி திரைப்படங்களிள் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். திருமணம் ஆகி பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த நடிகை  சன்னி லியோன் சில வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.

அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். சில நடிகைகள் குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு போய்விடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நடிகை சன்னி லியோன் கூறுகையில் எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதே சமயத்தில் என்னுடைய வேலையையும் நான் மிகவும் காதலிக்கிறேன்.

மேலும் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு குழந்தையை மட்டும் தான் என்னால் பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் மாற்றுத் தாயின் மூலம் எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதே போல் நடிகை நயன்தாராவுக்கும் குழந்தைகள் மீது பாசமும் ஆசையும் உண்டு ஆனால் தற்போது தன்னுடைய பட வேலைகளில் பிசியாக இருந்து வருவதால்  நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள் என்றுகூறப்படுகிறது.