சன்னி லியோன் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவு சன்னிலியோன் மிகவும் பிரபலம். ஒரு காலத்தில் சன்னி லியோன் வீடியோவை பார்க்க இளசுகள் தவம் கிடைப்பார்கள் இந்த நிலையில் அதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தற்போது சன்னி லியோன் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோன் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் தடம் பதித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். அதாவது தெலுங்கு திரைப்படத்தில் தான் சன்னிலியோன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு மஞ்சு நடிக்க இருக்கிறார். இவருடன் இணைந்து சன்னி லியோன் நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பரபரப்பாக நடைபெற இருக்கிறது இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு – நாகேஸ்வரராவ் என்ற கதாபாத்திரத்திலும் சன்னி லியோன் – ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் என சன்னி லியோன் தன்னுடைய சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதேபோல் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் சக நடிகர்-நடிகைகள் அனைவரையும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சன்னி லியோன் அந்த பதிவில் அறிவித்துள்ளார்.
இதோ அவர் அறிவித்துள்ள பதிவு.