நான் ஆடி பார்த்திருப்ப.. பாடி பார்த்திருப்ப.. நார்னாரா கிழிச்சு பார்த்ததே இல்லையே.. ஓ மை கோஸ்ட் படத்தில் மிரட்டும் சன்னி லியோன் – இதோ டீசர்..!

சன்னி லியோன் இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகை ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அந்த மாதிரியான படங்கள் நடித்து பின் அதிலிருந்து மாறி சினிமா பக்கம் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக தனது திறமையை வளர்த்துக் கொண்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலைகாட்டினார்.

ஒரு வழியாக இப்பொழுது இவருக்கு ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் வாய்ப்புகள் குவிந்து  வருக்கின்றன குறிப்பாக தென்னிந்தியாவில் இவருக்கான மவுஸ் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சன்னிலியோனுக்கான ரசிகர்களும் அதிகம், பட வாய்ப்புகளும் அவருக்கு அதிகமாக கிடைத்துள்ளது..

முதலில் வடகறி படத்தில் நடித்து தலைகாட்டினார். அதனைத் தொடர்ந்து வீரமாதேவி, ஒ மை கோஸ்ட் போன்ற படங்கள் இவருக்கு கிடைத்தன  இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது அதாவது நடிகை சுன்னி லியோன் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்த முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோனுடன் கை கோர்த்து யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜி பி முத்து, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் யுவன் வெற்றிகரமாக இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் நடிகை சன்னி லியோன் நடிப்பு பெரிய அளவில் தெரிகிறது மேலும் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது இதனால் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதோ ஓ மை கோஸ்ட் டீசரை நீங்களே..