பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற தமிழ் படத்தில் இனனையும் சன்னி லியோன்!!

sunnyleone
sunnyleone

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல இயக்குனர்கள் தனது சிறந்த படைப்பை கொடுத்து வருகின்றனர். அப்படி 2019 ஆம் ஆண்டு தனது சிறந்த படைப்பை கொடுத்தவர்தான் இயக்குனர்  விஜய் ஸ்ரீ ஜி. இவர் 87 வதில் சாருகாசனை வைத்து எடுத்த படம்தான் தாதா87. இத்திரைப்படம் அரங்கில் வெளிவந்து ஓரளவு ஓடியது.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீஜி அவர்கள் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தை தற்பொழுது எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக விக்ரமின் மருமகன் அர்ஜுமனன் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் பிக் பாஸ் ஜூலி மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது. மேலும் தலைப்பே வித்தியாசமாக உள்ளதால் இதனை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சன்னி லியோனுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது. உங்களுக்கு பப்ஜி கேம் விளையாட தெரியுமா என்று எனக்கு தெரியாது ஆனால் எனது படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் நான் சந்தோஷம் அடைவேன் என கூறினார், மேலும் இது முடியுமா என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இவரது கோரிக்கைக்கு என்ன ரிப்ளை பண்ணு வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஒரு பக்கம் இவர் நிச்சயம் இந்த படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ்க்கு நடனமாடுவார் என பலரும் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் இவர் இதற்கு முன்பு வடகறி படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு குத்தாட்டம் போட்டு உள்ளதால் நிச்சயம் இப்படத்திலும் அவர் ஒரு குத்தாட்டம் போடுவார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இருப்பினும் அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று ஒருபக்கம் யோசித்துக் கொண்டும் வருகின்றனர் ரசிகர்கள்.