முன்னணி நடிகரை திருமணம் செய்ய காத்திருக்கும் சுனைனா.! ரகசியத்தை கசியவிட்ட நடிகர்!!

sunnaina

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சுனைனா. ஆரம்பத்தில் தெலுங்கு படமான சம்திங் ஸ்பெஷல் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து அவர் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது மூலம் தமிழில் 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

எனினும் இவர் 2009ம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் ,திருத்தணி, நீர்ப்பறவை, சமர், நம்பியார், வன்மம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இருப்பினும் சமீபகாலமாக அவருக்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் தற்போது காதலித்து வருகிறார் அது வேறு யாருமில்லை விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணனை தானாம்.

இன்னும் சில மாதங்களில் அவரை திருமணம் செய்ய உள்ளதாக பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான ரங்கநாதன் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். இத்தகவல் உண்மைதானா  என்று தெரியவில்லை எந்த ஒரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

krishna-and-sunnaina
krishna-and-sunnaina