விஜய் டிவியில் பணியாற்றியவர்கள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சுனிதா. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பிரண்டாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் தற்பொழுது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக அறிமுகமானவர் சுனிதா.வடமாநிலத்தை சேர்ந்த இவர் தனது நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் முறைப்படி கற்றுக்கொண்டு நடனமாடி வந்தார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்று முறை போட்டியாளராக பங்குபெற்று வந்தார்.பிறகு தொடர்ந்து அவர் படிப்படியாக சீரியல் மற்றும் படங்களில் வாய்ப்பு கிடைத்ததை திறன் பட தக்க வைத்துக் கொண்டு தற்போது நடித்து வருகிறார்.
வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சுனிதா அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருவார். அந்த வகையில் தற்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு மக்களை சூடேற்றி வருகிறார்.