நாங்க இப்ப மட்டும் இல்ல அப்பவே அப்படி தான்.! சிறுவயது மார்டன் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி சுனிதா.

sunitha
sunitha

விஜய் டிவியில் பல வருடங்களாக டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் டான்ஸ் ஷோ மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனிதா. இவரின் சிறந்த நடன திறமையினால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சுனிதா சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.  அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பொதுவாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.

அந்த வகையில் சிவாங்கி, புகழ்,பாலா, மணிமேகலை, அஸ்வின்,பவித்ரா, தர்ஷா குப்தா உட்பட இன்னும் ஏராளமானவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

அதோடு சிலருக்கு வெள்ளித்திரையிலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள்  மனதில் குடியேறியவர் தான் சுனிதா. இவருக்கு தமிழ் பேச வராது என்றாலும் இதையாவது எக்குதப்பாக கூறி  அனைவரையும் உற்சாகப்படுத்தி விடுவார் ஏனென்றால் அவர் பேசும் தமிழ் அப்படி.

இதன் காரணமாகவே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்துள்ளது.  அதோடு இவர்நடனம் ஆடுவதில் மிகவும் ஆர்வம் உடையவர்.  அந்த வகையில் இவருக்கு சின்ன வயதிலிருந்தே டான்ஸராக வேண்டும் என்ற கனவு உள்ளது.

அந்த வகையில் சுனிதா தனது சின்ன வயதில் கரகாட்டக்காரன் போல் மேக்கப் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவது போல் போஸ் கொடுத்து புகைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்ன வயதிலேயே இவ்வளவு அழகா இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

116280315_619129262073197_3063656673370812919_n
116280315_619129262073197_3063656673370812919_n