ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து மொழிகளில் களமிறங்கும் சன்னிலியோனின் தமிழ் படம்..! அப்போ நயன்தாராவுக்கு ஆப்பா..!

sunny-leone

நடிகை சன்னி லியோனை தெரியாத  ரசிகர்களே கிடையாது.  ஏனெனில் இவர் இந்திய அளவு மட்டும் இல்லாமல் உலக அளவிலும் இவருடைய திரைப்படங்களை என்றும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழிலும் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி என்ற திரைப்படத்தில் கூட ஒரு குத்துப்பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டுள்ளார் இந்நிலையில் இவர் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன இந்த திரைப்படத்தை இயக்குனர் சசிகுமார் அவர்கள்தான் இயக்க உள்ளாராம்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது ஒரு திரில்லர் திரைப்படம் என்பதன் காரணமாக இதற்கு ஷெரோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை நடிகை சன்னி லியோனும் இந்த திரைப்படத்தின் இயக்குனரும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் சாராமைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து விடுமுறை நாட்களை செலவிட இந்தியாவிற்கு வரும் பொழுது அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை.

மேலும் இத் திரைப்படமானது தமிழ்மொழி மட்டும் இல்லாமல் மலையாளம் ஹிந்தி கன்னடம் தெலுங்கு என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக சன்னி லியோன் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அந்த வகையில் முதன்முதலாக தமிழில் இப்படி ஒரு திரைப்படத்தில் சன்னிலியோனை பார்ப்பது நமது ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் மிகச்சிறந்த அழகான இடங்களாக தேர்வு செய்து படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது

sunny leone-1
sunny leone-1

ஏற்கனவே தமிழ் சினிமாவில்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களாக தேடித்தேடி நடிகை நயன்தாரா நடித்து வருகிறார் இந்நிலையில் அவருக்கு போட்டியாக சன்னிலியோனும் தமிழில் கால்தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார் போகிற போக்கை பார்த்தால் இனி தமிழ் சினிமாவில் நயன்தாராவா சன்னி லியோனா என்ற போட்டி ஆரம்பமாகும் என ரசிகர்கள் அரசல் புரசலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

sanny leone