வடிவேலு அப்படிப்பட்ட ஆள் தான்.. இப்போ எப்படி இருக்காருன்னு தெரியாது.! சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை பேட்டி

Vadivelu
Vadivelu

Vadivelu: தமிழ் சினிமாவில் கலக்கி வரும் வடிவேலு சிறிய இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். அப்படி கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சீரியசான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்றவர்கள் நடிப்பில் வெளியான படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயின்னாக ராதா அறிமுகமானார். சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகை ராதா இதன் மூலம் பிரபலமடைந்ததற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளில் கிடைத்தாலும் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு அமையவில்லை எனவே சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.

திருமணமாகி சில வருடங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த இவர் பிறகு ஒரு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த வசந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணம் செய்துக் கொண்டு ஓராண்டு மட்டுமே ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தற்பொழுது ராதா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்  இந்த சூழலில் சமீபத்தில் பேட்டி அளித்த இவர் வடிவேலு குறித்து கூறியாதாவது, வடிவேலு சார் ரொம்ப சப்போர்ட் செய்வார், அன்பாக இருப்பார், அப்போதே ரொம்ப நட்பாக இருந்தார்.

டயலாக்ஸ் எல்லாம் நான் எப்படி பேசுகிறேனோ அதற்கு கோப்பரேட் பண்ணி பண்ணுவார். இப்பொழுது வடிவேலு சார் எப்படி என்று எனக்கு தெரியாது அப்போது எல்லாம் ரொம்ப உதவி செய்வார். அந்த பொறாமை எல்லாம் அவரிடம் இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும் அம்மாவும் வடிவேலு சார் ஒன்றாக தான் அமர்ந்து சாப்பிடுவோம் என்னுடைய அம்மாவை அவர் பவானி அம்மாவா  என்று தான் அழைப்பார்கள் என கூறியுள்ளார்.