முரளி வடிவேலுவை தொடர்ந்து சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தில் இந்த ஓட்ட பஸ்சை உருட்ட போவது யார் தெரியுமா..?

murali
murali

sundhara travels second part hero : தமிழ் திரை உலகில் வேற்றுமொழி திரைப்படங்களை ரீ மேக் செய்வது ஒருபக்கம் நடந்து கொண்டு வந்தாலும் தற்போது தமிழில் ஏற்கனவே வெளியாகி  மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படங்களையும் ரீ மேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட காசேதான் கடவுளடா என்ற திரைப்படம் கூட தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் முரளி வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் கூட அடுத்த பாகத்திற்கு ரெடி ஆகிவிட்டதாம்.  இது திரைப்படத்தின் முதல் பாகத்தை என்றுகூட மறக்கவே முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு காமெடி நிறைந்த திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் வடிவேலு முரளி மற்றும் ராதா வினுசக்கரவர்த்தி மணிவண்ணன் போன்ற பல்வேறு பிரபலமான நடிகர்கள் நடித்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஓட்ட பஸ்சை வைத்துக்கொண்டு இவர்கள்  பண்ணிய சேட்டைகள் மற்றும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற எலி  அனைத்துமே இந்த திரைப்படத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.

murali-1
murali-1

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் முரளி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைந்தார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடித்த வடிவேலு கூட சில பிரச்சனையின் காரணமாக திரைப்படத்தில் நடிக்க முடியாமல் இருக்கிறது.

இந்நிலையில் முரளி மற்றும் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளார்களாம் இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

yogibabu-1
yogibabu-1