டிக் டாக் என்ற சமூக செயலியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா நாடகத்தில் ஹீரோயினாக நடித்து வரும் சாயிஷா உட்பட வெள்ளித்திரையில் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் மிருணாளினி, குக் வித் கோமாளி சக்தி இப்படி பலர் டிக் டாக் மூலம் பிரபலமடைந்துள்ளார்கள்.கடந்த வருடம் தான் டிக் டாக் தடை செய்யப்பட்டது.
அந்தவகையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 2016ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி ஷோவில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இருந்தார்.
இதன்மூலம் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படத்தை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிறகு செத்தும் ஆயிரம் பொன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பிறகு தனது காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்துள்ளார்.இவருக்கு அம்மா,பாட்டி இருவரும் மட்டும் தான் இருக்கிறார்கள். சுந்தரி கலெக்டர் படிப்பதாக ஆசைப்படுகிறார்.
ஆனால் அவருடைய அம்மா அதிகமா படிச்சா கல்யாணத்துக்கு அதிகமா பவுனு போட சொல்லுவாங்க என்று கூறி படிக்க விடாமல் தடுக்கிறார்.ஆனால் சுந்தரி தனது பாட்டியின் ஆதரவில் அம்மாவிற்கு தெரியாமல் படித்து வருகிறார். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் எவ்வளவு பிரச்சினைகளையும்,அவமானங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து சீரியல் இயக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கேப்ரில்லாவும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.