தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி இவர் இயக்கிய உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு என தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட காபி வித் காதல் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார்..
திரை உலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் ஹீரோவாகவும் வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இதனால் சுந்தர் சி தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக சினிமா உலகில் இருக்கிறார்.\ சுந்தர் சி திரையுலகில் பட படங்களை இயக்கி இருந்தாலும் இவர் ரஜினியை வைத்து அருணாச்சலம் படம் எடுத்தார்.
அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது பல விசேஷ நாட்களில் அருணாச்சலம் திரைப்படம் வெளி வருகிறது ஏன் இந்த தீபாவளிக்கு கூட வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்பட வைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் சுந்தர் சி ரஜினியை வைத்து படம் மட்டும் இயக்காமல் அவருடன் நடித்தும் இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்…
அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியை பார்த்து சுந்தர் சி பேட்டி எடுப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருணாச்சலம் படத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த சீனை கவனிக்கவே இல்லை எனக் கூறி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித் தெளித்து அசத்தி வருகின்றனர்.. இதோ புகைப்படம்..