கவுண்டமணி செந்தில் காம்போ போல புதிய காம்போவை உருவாக்கப் போகும் சுந்தர் சி..!

senthil-1
senthil-1

தமிழ் சினிமாவில் 70, 80களில் சிறந்த நகைச்சுவை நடிகர்களாக வலம் வந்தவர்கள்தான் கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் இவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக  அழைக்கப்பட்டார்கள்.

அந்த வகையில் இவர்கள் நடிக்கும் காமெடி அனைத்துமே ஒருவருக்கொருவர் கிண்டலடித்து விளையாடும் வகையில் இருக்கும் இதன் காரணமாக இவர்களுடைய காமெடிகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்ப்பது மட்டுமில்லாமல் இளசுகளும் இதனை வைத்து தற்போது மீம்ஸ் கிரியேட் செய்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

பொதுவாக இவர்கள் காமெடி  திறமையை மிஞ்சுவதர்க்கு தமிழ் சினிமாவில் எந்த ஒரு நகைச்சுவை நடிகர்களும் உருவாகவில்லை என்றுதான் சொல்லலாம் அதுமட்டுமில்லாமல் தற்போது உருவாகும் திரைப்படங்கள் பலவற்றிலும் காமெடி நடிகர்களின் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டு வருகிறது இதனால் கதாநாயகனே காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஃகாப்பி வித் காதல் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு காமெடி நடிகராக நடிப்பது மட்டுமில்லாமல் இதில் ரெடின் கிங்ஸ்லியும் நடித்து வருகிறார்.

yogibabu-1
yogibabu-1

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரையும் கவுண்டமணி-செந்தில் போன்று காட்டப் போவதாகவும் அவர்கள் திரை உலகில் எந்த அளவிற்கு பேசப்பட்டாலும் அதேபோல இவர்களைப் பற்றியும் பேச வைக்கப் போவதாகவும் இயக்குனர் சுந்தர் சி முழு திறமையை வெளிகாட்ட உள்ளார்.

sundhar c
sundhar c