டேமேஜ் ஹீரோயின் இவர்தான் சுந்தர் சி அதிரடி பேச்சி.! யார் தெரியுமா.?

sundar-c
sundar-c

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுந்தர் சி, புஷ்பூ உள்ளிட்ட பட குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சுந்தர் சி பேசிய போது காபி வித் காதல் திரைப்படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள் அவர்களை குறித்து பேசி உள்ளார் அதில் குறிப்பாக மாளவிகா சர்மா குறித்து பேசிய போது அவர் ஒரு டேமேஜ் நடிகை என்று சுந்தர் சி கூறியுள்ளார்.

எதற்காக அப்படி கூறினார் என்றால் அவர் ஒரு நாள் சூட்டியில் கண்ணில் அடிபட்டு விட்டது அதன் பிறகு மறுநாள் கையில் அடிபட்டுவிட்டது இன்னொரு நாள் காலில் அடிபட்டு விட்டதாக கூறியுள்ளார் இதனால்தான் மாளவிகா சர்மாவை ஒரு டேமேஜ் ஹீரோயின் என்று கூறியுள்ளார் காபி வித் காதல் படத்தின் இயக்குனர் சுந்தர் சி.

பொதுவாக ஆக்சன் காட்சிகளில் ஹீரோவுக்கு தான் அதிகம் காயங்கள் ஏற்படும் ஆனால் இது ஒரு ரொமாண்டிக் படமாக இருந்தாலும் மாளவிகா சர்மாவிற்கு அதிகமாக காயங்கள் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இவருடைய காட்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு தான் எடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் ஒரு வக்கீல் என்றும் அவர் பயங்கரமாக சட்டம் பேசுவார் என்று எண்ணி இருந்தோம் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் சாதுவாக பேசியது எங்களை ஆச்சரியப்பட வைத்தது என்று கேள்வியுடன் கூறியுள்ளார் சுந்தர் சி. இதே போல் அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா தாத்தா, மற்றும் டிடி, ரைசா வில்சன் ஆகியோர் பற்றியும் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

காபி வித் காதல் திரைப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி, உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.