தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் 20 வருடங்களுக்கு மேலாக சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக விளங்கி வருவது தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கின்னஸ் சாதனை படைத்த சீரியல்களும் இருந்துள்ளது.
அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலாக கயல் சீரியல் விளங்கி வரும் நிலையில் புதிதாக இந்த சீரியலுக்கு பிரபல நடிகை ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். கயல் சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாகவும், சைத்ரா ரெட்டி ஹீரோயினாகவும் நடித்துவரும் நிலையில் இவர்களுடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒரு பெண் தனியாக இருந்து தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் நிலையில் அவருடைய தைரியத்தையும், மன நிலைமையும் விளக்கும் வகையில் இந்த சீரியலின் கதைகளம் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலுக்கு ஹென்சா தீபன் அறிமுகமாக இருக்கிறார்.
ஹென்சா தீபன் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் சின்னத்திரையில் சன் டிவி, ஜீ தமிழ் என பல சீரியல்களில் நடித்து வருகிறார். அபியும் நானும், பச்சைக்கிளி, தென்றல் வந்து என்னை தொடும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது கயல் சீரியலிலும் இவர் அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.
இந்த சீரியலினை அடுத்து விஜய் டிவியில் விக்ரம் வேதா என்ற புதிய சீரியல் அறிமுகமாக இருக்கும் நிலையில் அது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது எனவே அந்த சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹென்சா நடித்துள்ளார். இவ்வாறு ஹென்சா தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார்.