பொதுவாக சின்னத்திரை தொலைக்காட்சிகள் சமீப காலங்களாக போட்டி போட்டுக் கொண்ட ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் ஒரு சில சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் அதன் இரண்டாவது பாகத்தையும் ஒலிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருக்கிறது எனவே இதுகுறித்து தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சி தான் சன் டிவி. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ரோஜா.
இந்த சீரியல் தற்பொழுது கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்துடன் இந்த சீரியல் முடிக்கு வர இருக்கிறது மேலும் இதே போன்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் விரைவில் முடிய இருக்கிறது. மேலும் இந்த சீரியல் முடிந்த சில வாரங்கள் கழித்து பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பகுதி ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது ரோஜா சீரியலில் யசோதாவின் கணவர் ரோலின் நடித்து வரும் பாலு மறைமுகமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது நாங்கள் மீண்டும் ஒன்றாக வருவோம் என்றும் இதே சீரியல் குழுவுடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் அவர் வெளியிட்டுள்ளார்.
எனவே ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். மேலும் ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வந்தது ஆனால் சமீப வாரங்களாக டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்த வாரம் மீண்டும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து இருப்பது.