ஆடிஷனுக்கு சென்றேன் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என கூறினார்கள்.! பகிர் கிளப்பிய ஜீ தமிழ் மற்றும் சன் டிவி நடிகை.!

சினிமாவில் மட்டும் அல்லாமல் சீரியல்களிலும் நடிகைகள் தங்களுக்கான இடத்தை பிடிப்பது மிகவும் எளிதான காரியம் கிடையாது. நடிப்பில் எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் பெண்களுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை அதேபோல் சீரியலில் நீடித்து நிலைப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

போட்டி நிறைந்த உலகில் பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சிலர் தகாத முறையில் நடந்து கொள்வது துன்புறுத்தல் எல்லாம் நடிகைகளிடம் இருந்து புகார் வந்து கொண்டேதான் இருக்கிறது இந்த நிலை இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலான கயல் சீரியலில் நடித்து வரும் நடிகை  பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் கயல் இந்த சீரியலில் அபி நவ்யா என்பவர் நடித்து வருகிறார். சின்னத்திரை ரசிகர்களிடையே தெரிந்த முகமாக காணப்படும் இவர் செய்தி வாசிப்பாளராக  முதன்முதலில் பணியாற்றி வந்தார். தற்பொழுது இவர் முன்னணி சீரியல் நடிகையாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பிரியமானவள் தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.  பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அபிநவ்யா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி என்ற சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் கயல் சீரியலிலும் நடித்து வருகிறார் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் காஸ்டிங் கவுச் சின்னத்திரையில் இருக்கிறது என பரபரப்பாக கூறியுள்ளார் செய்தி வாசிப்பில் இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியபோது சின்னத்திரையில் நடிக்க விரும்பினால் 1 சிபாரிசு வேண்டும் அல்லது மிகவும் கடினமாக இருக்கும் என கூறினார்.

சின்னத்திரையில் ஆடிசன் பற்றி பேசுகையில் இதுவரை நான் 250க்கும் மேற்பட்ட ஆடிஷனுக்கு சென்றதாகவும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் நேரடியாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு பலரும் கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் போலி காஸ்டிங் நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தகாத முறையில் பேசியதாகவும் கூறினார்.

புதிதாக நடிக்க வரும் பெண்களுக்கு மிகவும் கடினமான பிரச்சினையாக இந்த பிரச்சினையை பார்த்து வருகிறார்கள் எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

abinavya
abinavya

Leave a Comment