தமிழ் சின்னத்திரையில் நம்பர் 1 தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவி சீரியலுக்கு என்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஏராளமான வித்தியாசமான கதை அம்சம் உள்ள சீரியல்களை ஒளிபரப்பு வரும் நிலையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் பெரிதும் சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது டாப் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்பொழுது பல சுவாரசியமான கதைய அம்சத்துடன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது அதாவது திருச்செல்வம் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியல் பெண் சுதந்திரம் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே கணவர்களால் முடக்கப்பட்டு இருக்கிறார்கள் பிறகு அனைவரையும் எதிர்த்து அந்த பெண்கள் போராடி வருகிறார்கள் இவ்வாறு பெண்களின் அடிமைத்தனத்தை வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
எனவே இந்த சீரியல் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜனனியை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என குணசேகரன் திட்டம் போட்டு வரும் நிலையில் அதற்காக விவாகரத்தை ஒரு காரணமாக அவர் பயன்படுத்தினாலும் ஜனனி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்து வருகிறார் மேலும் ஜனனிக்கு இடம் கொடுக்கும் அப்பத்தாவையும் பழிவாங்க குணசேகரன் துடிக்கிறார்.
இந்நிலையில் குணசேகரன் திட்டத்தை புரிந்து கொண்ட அப்பத்தா பல திட்டங்களை போட்டுள்ளார் எனவே தற்பொழுது ஆதரவின்றி தனியாக இருக்கும் ஜனனிக்கு தன்னுடைய 40 சதவீத சொத்தை எழுதி வைக்க இருக்கிறார் சொத்து மட்டும் ஜனனி கையில் வந்துவிட்டால் குணசேகரன் ஜனனியை அசைக்கக்கூட முடியாது எனவே குணசேகரனின் ஆட்டத்தை ஜனனி தான் நிறுத்தி வைப்பார் மேலும் குணசேகரின் உண்மையான முகத்தை தன்னுடைய கணவருக்கும் வெளிப்படுத்துவார் எனவே இனிவரும் எபிசோடுகள் மிகவும் சுவாரசியமாக அமைய இருக்கிறது.