40 சதவீதம் மட்டுமல்லாமல் இன்னும் இருக்கும் சொத்திலும் பிரச்சனை இருப்பதாக கூறும் அப்பத்தா.! இது தெரியாமல் ஆடும் குணசேகரன்..

YETHIRNICHAL
YETHIRNICHAL

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதாவது இந்த சீரியல் தங்களுடைய கணவர்களிடம் எழுத்துப் பேச முடியாத அடிமைகளாக பெண்கள் இருந்து வருகிறார்கள். எனவே தங்களுடைய சுதந்திரத்திற்காக எப்படி போராடி தங்களுடைய வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்பதனை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

எனவே இந்த சீரியலின் வில்லனான குணசேகரன் ஜனனிக்கு எதிராக பல சதி திட்டங்களை செய்து வருகிறார். மேலும் ஜனனியும் குணசேகருக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஒரு கட்டத்தில் ஜனனி குணசேகரனுக்கு எதிராக போலீசை அழைத்து வருகிறார் இது தெரிய வந்தவுடன் கதிர் ஜனனியை இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என கூறி பெரிய பிரச்சனையாக உருவாகிறது.

மேலும் இன்னும் ஒரு நிமிடம் கூட ஜனனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என அப்பத்தாவிடம் கதிர் மல்லு கட்டி நிற்கிறார் எனவே குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கதிரிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்து வரும் நிலையில் குணசேகரன் பேச்சைக் கேட்டு வந்த கதிர் தற்பொழுது இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கூட கேட்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இதனால் கோபமடைந்த குணசேகரன் என் பேச்சை கூட நீ கேட்க மாட்டியா என்ற கதிரை சமாதானப்படுத்தி முளைப்பாரி முளைக்கின்றதற்கு முன்னாடியே கும்மி அடிச்சு போயிறதாடா என்று பழமொழி உடன் கதிரை அழைத்து செல்கிறார் அப்பொழுது அப்பத்தா ஜனனியிடம் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய 40 சதவீத பங்கு என்னிடம் உள்ளதால் தான் நான் எவ்வளவு பேசினாலும் பொருத்து போகிறார்கள் என கூறுகிறார்.

மேலும் இந்த சொத்தில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்பது இவர்களுக்கு தெரியாது என்று அப்பத்தா ஜனனியிடம் கூறுகிறார். இதற்கு முன்பே குணசேகரன் ஆதி இருவரும் இணைந்து பெரிய பிளான் ஒன்றை போட்டு வைத்துள்ளார்கள். இதனைப் பற்றி ஆதியிடம் கூற பிறகு ஆதி அமைதியாகிறார் மேலும் இதற்கு மேல் ஜனனி போலீஸ் ஸ்டேஷனில் சென்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் சத்தமில்லாமல் அப்பத்தாவை தீர்த்து கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் ஆதி, குணசேகரன் மற்றும் கதிர் மூவரும் திட்டம் தீட்டுகின்றனர்.

இதனை கேட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினர்கள் அனைவரும் முகத்திலும் பயம் தெரிகிறது. இவ்வாறு திடீரென்று அப்பத்தா ஜனனியிடம் சொத்தில் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது என கூறியுள்ள நிலையில் அது என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.