தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் புதிய சேனல்களும் புதிதாக அறிமுகமாகி வருகிறது இதன் காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொலைக்காட்சிகள் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தொலைக்காட்சிகள் தான் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருந்தாலும் முக்கியமாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே வாரம் தோறும் போட்டி நிலவுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஏனென்றால் எந்த தொலைக்காட்சியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் டிஆர்பி-யில் முன்னணி வகிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தொடர்ந்து சில தொலைக்காட்சிகள் மட்டுமே டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது மேலும் அசுர வளர்ச்சியும் பெற்றுள்ளது அந்த தொலைக்காட்சிகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
விஜய் சூப்பர்: இந்த தொலைக்காட்சியில் பொதுவாக திரைப்படங்கள் மட்டும்தான் வெளியாகும் மேலும் ஏராளமான புதிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அதோடு தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் டப்பிங் திரைப்படங்களும் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது இந்த தொலைக்காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் டிஆர்பி-யில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
கே டிவி: இந்த தொலைக்காட்சி சன் டிவி குழுமத்தின் மற்றொரு தொலைக்காட்சியாக இருந்து வருகிறது மேலும் தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமே இந்த தொலைக்காட்சியில் வெளியாகி வருகிறது. பொதுவாக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் பெரும் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது ரசிகர்களும் தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கே டிவி டிஆர்பி-யில் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.
ஜீ தமிழ்: இந்த தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சுவாரசியமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குடும்ப இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.
ஸ்டார் விஜய்: அதாவது ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோர்களை ஒளிபரப்பும் ஒரே தொலைக்காட்சி விஜய் டிவி தான். விஜய் டிவியில் பொதுவாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் சுவாரசியமாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் இருப்பதால் தற்பொழுது இந்த தொலைக்காட்சி டிஆர்பி-யில் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளது.
மேலும் பாக்கியலட்சுமி,பாண்டியன் ஸ்டோர்,ராஜா ராணி 2, காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சன் டிவி: பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் ஒரே தொலைக்காட்சி சன் டிவி தான். தொடர்ந்து ஏராளமான சீரியல்களை மிகவும் வித்தியாசமான கதைய அம்சத்துடன் ஒளிபரப்பி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து புதுமுக நடிகர்,நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருவதால் இந்த தொலைக்காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சீரியல்களை தொடர்ந்து புதிய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் செய்திகள் போன்றவை வெளியாகி வரும் நிலையில் சன் டிவி டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.