டிஆர்பி-யில் பட்டையை கிளப்பிய விஜய் திரைப்படம்.!எந்த தொலைக்காட்சி முதலிடம் தெரியுமா.?

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

எனவே இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருவதால் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு உள்ளது. அதோடு முழு உறங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் அனைவரும் டிவி பார்த்து வருவதை வழக்கமாக வைந்திருக்கிறார்கள். அந்தவகையில் முன்பை விடவும் தற்பொழுது தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் அதிகமாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் தான் அதிக பார்வையாளர்களை பெற்று முன்னணி வகிக்கிறது. இத்திரைப்படம் 12028 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களையும் ஓவர்டேக் செய்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல மற்றும் ரோஜா இந்த இரண்டு சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்கிறது.

Leave a Comment

Exit mobile version