முறையான இரண்டு முன்னணி நடிகைகளை சீரியலில் இறக்கி அழகு பார்க்கும் சன் டிவி..! இனிமே டிஆர்பியில் நாங்க தான் கிங்க்..!

meena
meena

தற்போது வெள்ளி திரை நடிகைகளைப் போலவே தற்போது சின்னதிரை நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வெளிவந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் முத்தழகு என்ற ஒரு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அந்த வகையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலும் மிக விரைவில் ஒளிபரப்பப் போவதாக விஜய் டிவி அறிவித்த நிலையில் அதில் கேப்ரில்லா, சித்தார்த், திரவியம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்களாம்.

அதேபோல அவர்களுக்கு போட்டியாக சன் டிவியும் பிரபல முன்னணி நடிகர்களாக வலம்வந்த ராதிகா சரத்குமார், குஷ்பு ,மீனா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல்வேறு பிரபலங்களை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே சன் டிவியில் ராதிகா நடித்த சித்தி சீரியலும் குஷ்பு நடிப்பில் வெளிவந்த சீரியலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் நடிகை குஷ்பு அவ்வப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா ஆகிய இருவரும் ஒரே சீரியலில் இணைய உள்ளார்களாம். இவ்வாறு வெளிவந்த தகவல் மூலமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த சீரியலை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.