சன்டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றன. பல பழைய சீரியலாக இருந்தாலும் புதிய சீரியலாக இருந்தாலும் மக்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். புதிய சீரியல்களாக சித்தி 2, பூவே உனக்காக, திருமகள், கண்ணான கண்ணே, சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், வானத்தைப்போல, அன்பே வா, எதிர்நீச்சல், போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று வந்தது அதுமட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 ஆக இடம் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வந்தது. இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியெல்லா செல்லஸ் நடிப்புக்காக பலரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.சுந்தரி கதாபாத்திரத்திற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.
தற்போது சுந்தரி அனுவின் கம்பெனிக்கு சிஇஓ ஆகிவிட்டார். இவர்களின் இருவரான கணவன் கார்த்திக், ஆனால் சுந்தரிக்கு மட்டுமே இந்த உண்மையெல்லாம் தெரிந்துள்ளது. அனுவிற்கு கார்த்தி தான் சுந்தரியின் கணவன் என்று இன்றுவரை தெரியாது. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார் சுந்தரி எப்பொழுது சுந்தரி பூகம்பமாக வெடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து அணு கர்ப்பமாக உள்ளதால் தான் சுந்தரி எந்த உண்மையும் சொல்லாமல் இருக்கிறார். இவை கார்த்திக்கு சாதகமாக உள்ளது தற்போது கார்த்தியின் அக்கா கணவரான முருகன் கோவில் திருவிழாவிற்கு கார்த்தியின் நண்பரான கிருஷ்ணாவுக்கு போன் செய்து கோவில் திருவிழாவிற்கு அழைக்கிறார். கார்த்தியும் அழைத்து வருமாறு கூறுகிறார்.
இந்நிலையில் கார்த்திக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கிருஷ்ணா சுந்தரிடம் கூறிவருகிறார். இதெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை பிறகு திருவிழாவிற்கு முதல் நாள் கார்த்திக்கு வரமாட்டார் என்று கூறுகிறார் அதையும் சுந்தரி சிறிதும் கண்டுக்கவில்லை பிறகு கார்த்தியின் மாமா திருவிழாவிற்கு அழைப்பதற்காக போன் செய்கிறார் இதற்கெல்லாம் சுந்தரி தான் காரணம் என்று சுந்தரியை போகவிடாமல் தடுப்பதற்காக திட்டம் தீட்டி வருகிறார்.
இதைத்தொடர்ந்து மேலும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் அடுத்து என்ன நடக்கப் போவது என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்