தற்பொழுது உள்ள ஏராளமான தொலைக்காட்சிகள் தொடர்ந்து புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சீரியல்களை ஒளிபரப்பி சீரியலுக்கு என்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்தும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
அந்தவகையில் பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி-2,பாண்டவர் இல்லம், சந்திரலேக்கா, தாலாட்டு,அபியும் நானும், வானத்தைபோல, கண்ணான கண்ணே, ரோஜா, அன்பே வா அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தாலும் சுந்தரிகள், எதிர்நீச்சல் ஆகிய சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றிக்கொடியை காட்டி வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதாநாயகியான சுந்தரி தான். இவரின் உண்மையான பெயர் கேப்ரியல்லா இவர் டிக் டாக்,டப்ஸ்மாஷ் என இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் இவருக்கு தெரியாமல் இவரின் கணவர் கார்த்திக் கதாபாத்திரத்தில் விஷ்ணு மேனன் என்பவரும் அவரது இரண்டாவது மனைவியான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கோபிநாத் என்பவர் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் என்பவர் அனுவின் அம்மா மல்லிகா கதாபாத்திரத்திலும் சன் தொலைக்காட்சி சீரியல்களில் பிரபலமான மனோகர் கிருஷ்ணன் சுந்தரியின் மாமா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியல் கதாநாயகி கருப்பு நிறம் கொண்ட பெண்ணாக கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார் ஆனால் தனது தாய்மாமா முருகனுக்காக அவரது மனைவியின் தம்பியான கார்த்திகை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. சுந்தரி கருப்பாக இருப்பதால் கார்த்திக் அவளை அடியோடு வெறுக்கிறான்.
அவளுக்கு தெரியாமல் தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறான். ஒரு தகவல் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் சுந்தரிக்கு தெரிந்துவிட்டது இருந்தாலும் அனு கர்ப்பமாக இருப்பதால் அந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கார்த்திகை காட்டிக் கொடுக்காமல் சுந்தரி அமைதியாக இருந்து வருகிறார்.
அந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது மல்லிகா அவர்களிடம் சிஇஓவாக விரும்பவில்லை என சுந்தரி சொல்லி விட்டது தெரிவிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் எங்களுக்கு அதில் விருப்பம் இருந்தாலும் சுந்தரியின் கணவருக்கு உடன்பாடு இல்லை என தெரிவிக்க உடனே சுந்தரின் கணவரை சமாதானம் செய்வதாகச் சொல்லி முருகனை போன் செய்ய வைக்கிறார்.
தனது அக்கா கணவரின் போனில் மாமியார் மல்லிகாவின் குரலைக் கேட்கும் கார்த்திக் பயந்து விடுகிறார் இனி கார்த்திக் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை மல்லிகா சுந்தரியை சம்மதிக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது.