விரைவில் முடிய இருக்கு சன் டிவியின் பிரபல சீரியல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

sun tv 1

சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ், போன்ற தொலைக்காட்சியில் சீரியல்கள் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடம் கிடைத்து வந்தது. டிஆர்பியில் சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டுக்கொண்டு வருகிறது. திரைப்படங்களை விட சீரியல்கள் தான் மக்கள் அதிகமாக விரும்பி வருகிறார்கள். மக்களுக்காகவென்றே காலை நிறங்களில் இருந்து இரவு நேரங்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் சன் டிவியில் சித்தி 2 சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனை தொடர்ந்து இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரீத்தி சர்மா, நந்தன் லோகநாதன் மற்றும் ஷர்மிளா ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் வெண்பா கதாபாத்திரத்தில் ப்ரீத்தி சர்மா நடித்து வருகிறார் யாழினி கதாபாத்திரத்தில் தர்ஷனா நடித்து வருகிறார். கவின் கதாபாத்திரத்தில் நந்தன் லோகநாதன் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் சித்தி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராதிகா நடித்து வந்தார் சில நாட்களுக்கு முன்பு சில காரணங்களால் சித்தி தொடரில் தொடர முடியாத நிலையில் சீரியலை விட்டு விலகிக்கொண்டார். தற்போது ராதிகா கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி C/o ராணி என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சித்தி 2 சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முடிவடைய போவதாக தகவல் ஒன்று வெளியாகி வந்துள்ளது. நன்றாகத்தானே ஓடிக்கொண்டிருந்தது சீரியல் திடீரென நிறுத்த காரணம் என்ன என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

siththi 2
siththi 2

எனவே சித்தி 2 சீரியல் உறுதியாக தான் முடிவடையப் போகிறது. என்று தெரியவில்லை அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அதை தொடர்ந்து சித்தி 2 சீரியல் சீசன் சீசனாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தி 2 சீரியல் முடிவடைவதில் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தை அடைகிறார்கள்.