பூவே உனக்காக சீரியல் முடியவுள்ள நிலையில் அதற்காக சன் டிவி எடுத்த அதிரடி முடிவு.!

poove-unakaha-1

தற்பொழுது உள்ள ஏராளமான தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.  முக்கியமாக விஜய் டிவி,சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ்-தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகளும் சீரியலுக்கென்று பெயர்போன ஒன்றாக இருந்து வருகிறது.

முக்கியமாக சன் மற்றும் விஜய்  தொலைக்காட்சி இரண்டும் டிஆர்பி-யில் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியலை இடம்பெறாத அளவிற்கு போட்டி போட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சன் டிவியில் 10:30மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியல் முடிய இருப்பதாக முன்பே தகவல் வெளிவந்தது.

இதில் ஹீரோவாக அசீம் நடித்து வருகிறார்.  மேலும் இன்னும் ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த சீன் கிளைமாக்ஸ் சூட்டிங் நடைபெற்று வருகிறது.  விரைவில் முடி இருக்கும் நிலையில் கடைசி எபிசோட் விரைவில் ஒலிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற பிறகே ஹீரோ, ஹீரோயின் ஆகியவர்கள்  டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெறவில்லை. இவ்வாறு குறைந்த ரேட்டிங் பெறுவதால் தான் இந்த சீரியலை விரைவில் முடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

poove-unakaha
poove-unakaha
aruvi

இன்னொருபுறம் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகளுக்கு சரியாக சம்பளம் தரவில்லை என்பதால் அவர்கள் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் தற்போது இந்த சீரியல் முடிய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல் முடிய இருப்பதால் இதற்கு அடுத்ததாக 10:30 மணிக்கு ஸ்லாட்டில் அருவி சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பாகிறது.