ஜகமே தந்திரம் ரக்கிட ரக்கிட பாடலில் நடனமாடியுள்ள சன் டிவி சீரியல் நடிகை.! அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!

jagame thanthiram
jagame thanthiram

தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் ஜிகர்தண்டா இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களுடைய வெற்றி பெற்றது. ஜிகிர்தண்டா திரைப்படத்தை தொடர்ந்து இறைவி என்ற திரைப்படத்தை இயக்கிய இருந்தார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார். புடிச்சாலும் புளியங்கொம்பு பிடிப்பதுபோல் இவருக்கு ரஜினி திரைப்படம் கிடைத்தது மிகப்பெரிய லக் என்றே கூறலாம். அதன்பிறகு முன்னணி நடிகரான தனுஷ் அவர்களை வைத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கிய முடித்தார்.

இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி  ஒளிபரப்பாகி வருகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தில் வெளிநாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டிலிருந்து விரட்டுவதற்காக கேங்ஸ்டார் கும்பல் ஒன்று செயல்பட்டுவருகிறது அவர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார்.

அவரை மதுரை கேங்ஸ்டார் தனுஷ் அவர்களை வைத்து வெளிநாட்டு லண்டன் கேங்ஸ்டர் கும்பல் போட்டுத் தள்ளுகிறது அதன்பிறகு தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு பின்பு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார் பின்னர் தனுஷ் என்ன ஆனார் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவுதான் விமர்சனங்களைப் பெற்றது.

jagame thanthiram
jagame thanthiram

ஆனால் படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டடித்த வருகிறது அதிலும் குறிப்பாக ரகிட ரகிட என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இந்தப் பாடலுக்கு பாபா பாஸ்கர் நடனம் அமைத்தார் இந்த பாடலில் தனுஷ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணாக வள்ளி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரம் வந்தவர்தான் சஞ்சனா.

அவரைத் தொடர்ந்து அதே பாடலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரில் அஸ்வினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தயால்  ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் நடனமாடியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அன்பே வா சீரியல் நடிகையா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

anbe va
anbe va