பிரபல தயாரிப்பாளரை 2வது திருமணம் செய்துக்கொண்ட சன் டிவி சீரியல் நடிகை மகாலட்சுமி.! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..

mahalakshmi

சின்னத்திரையில் தொடர்ந்து பல ஆண்டு காலங்களாக ஏராளமான சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார் முக்கியமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் வில்லியாகவும்,ஹீரோயினாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் ராதிகாவின் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் ராதிகா நடிப்பில் உருவாகி வரும் அனைத்து சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார். அந்த வகையில் ராடான் தயாரிப்பில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த நிலையில் அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து மகாலட்சுமி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் இப்படிப்பட்ட நிலையில் அவர் சீரியல் நடிகர் ஈஸ்வரன் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

mahalakshmi
mahalakshmi

எனவே ஈஸ்வரியின் மனைவி ஜெயஸ்ரீ இது குறித்து சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை வெளியிட்டார் எனவே மகாலட்சுமி இந்த விஷயம் உண்மை இல்லை என்று சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்தார் அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு சர்ச்சையும் வெளிவரவில்லை.

mahalakshmi 1

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளரான இவர் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், நலனும் நந்தினியும் போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரை பற்றி பேசி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தார்.இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.