சின்ன திரையிலேயே அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை இவர்தான்..? அதுவும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா..

சினிமாவைத் தாண்டி சமீபகாலமாக சீரியலை தான் மக்கள் அதிகமாக ரசித்துப் பார்க்கிறார்கள். அதேபோல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, வயதானவர்கள் முதல் இளமையானவர்கள் வரை அனைவரும் சீரியலை ரசித்துப் பார்க்கிறார்கள்.

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு சீரியலை ஒளிபரப்பி டிஆர்பிஇல் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது. என்னதான் மற்ற தொலைக்காட்சிகளில் சீரியல்களை ஒளிபரப்பினாலும் சீரியலின் சிம்மாசனமாக இருப்பது சன் தொலைக்காட்சிதான். அப்படி இருக்கும் நிலையில் டிஆர்பி அடிப்படையில் முன்னணி இடத்தை பிடிக்கும் சீரியல்கள் நடிகைகளின் சம்பள விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் மக்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் மதுமிதா இவர் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருந்தார் கர்நாடகாவை சேர்ந்த இவர் கன்னட தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்களின் மனதை வென்ற மதுமிதாவுக்கு ஒரு நாள் சம்பளமாக பதினைந்தாயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

ஹீரோயினுக்கு தான் சம்பளம் அதிகம் என்று கூறப்பட்ட நிலையில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர் சைத்ராரெட்டி  இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் கயல் சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் கயல் என்ற கேரக்டர் மூலம் தமிழ்நாட்டின் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வரும் இவர் தன்னுடைய பெயர் சைத்ரா ரெட்டி என்ற அடையாளத்தை மறந்து கயலை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள், இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் சன் தொலைக்காட்சியில் சுந்தரி என்ற சீரியல் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரியல்லா இவர் தற்பொழுது சுந்தரி சீரியலின் இரண்டாவது பாகத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் சுந்தரி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளமாக 12000 ரூபாய் வாங்கி வருகிறார்.

ராஜா ராணி சீரியல் மூலம் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆலயமானசா இவர் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் சஞ்சீவ்வை திருமணம் செய்து கொண்டார் பின்னர் ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வந்தார் திடீரென கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலகினார் தற்பொழுது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 20000 ரூபாய் சம்பளம் வழங்குகிறார்களாம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தென்றல் என்ற சீரியல் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஸ்ருதி ராஜ் இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ் என்ற சீரியலில் நடித்தவர் அது மட்டும் இல்லாமல் அழகு, தாலாட்டு என பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் லட்சுமி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் இவருக்கு ஒரு நாளைக்கு சம்பளமாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.