கடந்த 25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக சன் டிவி வளம் வந்து கொண்டிருக்கிறது. சன் டிவியில் அறிமுகமாகும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரம் நிலையில் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து மிகவும் பிரபலமாக இருந்து வரும் சீரியல் தான் ரோஜா.
இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரவு 9 மணி அளவில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அறிமுகமானது அதாவது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அன்று ஒளிபரப்பானது.
தற்பொழுது 1000 எபிசோடுகளை தாண்டி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக கர்நாடகாவைச் சேர்ந்த சிபு சூரியன் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக ஆந்திராவைச் சேர்ந்த பிரியங்கா நல்காரி ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.
இவர்களுடைய ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ள நிலையில் இவர்களை கொண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கதைப்படி கலை கட்டி கடலில் ரோஜாவின் உடல் தூக்கி எறியப்பட்ட நிலையில் தற்பொழுது உயிருடன் சிலரால் மீட்டெடுக்கப்பட்ட உள்ளார். ரோஜாவை தேடி பல இடங்களுக்கு அர்ஜுன் செல்ல ரோஜா கர்ப்பமாக இருப்பதால் அவரை நினைத்து நாள்தோறும் அழுகிறார்.
மேலும் ரோஜாவைத் தேடுவதற்காக அர்ஜுனுக்கு போலீசர்கள் உதவி செய்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள எபிசோடில் குப்பத்தில் இருக்கும் ரோஜாவை அர்ஜுன் பார்த்து விடுகிறார் பிறகு அவரிடம் பேச ரோஜாவிற்கு அனைத்து நினைவுகளும் மறந்து விடுகிறது எனவே ரோஜா தெரியாது என குறிப்பிடுகிறார் இதன் காரணமாக அர்ஜுன் ரோஜா காலில் விழுந்து அழுகிறார்.இப்படிப்பட்ட நேரத்தில் ரோஜா என்ன முடிவெடுப்பார் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.