கொரோன நிதி உதவிக்காக அலேக்கா 30 கோடியை தூக்கிக் கொடுத்த சன் டிவி நிறுவனம்.!

sun-tv
sun-tv

கொரோனா என்ற கொடிய வைரஸ் கடந்த ஆண்டு ஆரம்பித்து தற்போது வரை மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் படாதபாடு படுத்தி வருகிறது இதற்கு முடிவே இல்லையா என்று கேட்டு வந்த மக்களுக்கு இதற்கான தடுப்பூசிகளை தமிழக அரசு செலுத்தும் பணியில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது.

இந்த கொரோனா வைரஸால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் இருந்து தற்போது வரை பல பிரபலங்கள் இதனால் மறைந்து விட்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் பார்த்தால் ரசிகர்கள் பல சினிமா பிரபலங்களை இழந்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இது எப்பொழுது போகும் என்பது மக்களுக்கு கேள்விகுறி தான் மேலும் இந்த வைரஸ் பாரபட்சம் பார்க்காமல் குழந்தைகளிலிருந்து முதியோர்கள் வரை பரவி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தங்களது தினசரி வேலைகளை பார்ப்பதை கூட விட்டுவிட்டார்கள் அவ்வளவு அச்சத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இந்த வைரஸால் மக்கள் பலரும் படாதபாடு படுவதால் தமிழக அரசு விருவிருப்பாக தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளது ஆக்சிஜன் சிலிண்டர்,மருந்துகள் போன்றவற்றை வழங்குவதற்காக சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இதற்காக நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் தல அஜித் தற்பொழுது இதற்காக 25 லட்சம் சமீபத்தில் வழங்கியுள்ளார் அதேபோல் ரஜினியும் ஒரு கோடி நிதி உதவி வழங்கியுள்ளார் மேலும் பல சினிமா பிரபலங்கள் இதேபோல் மக்களின் நிலைமையை பார்த்து கருணை பட்டு நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் மகள்களின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டு சன் டிவி தொலைக்காட்சி நிறுவனம் சுமார் 30 கோடி வழங்கியுள்ளது மேலும் இதே போன்ற பல நிறுவனங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

sun tv2
sun tv2

இந்நிலையில் சன் டிவி நிறுவனம் 30 கோடியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் மக்களின் நிலைமையை பார்த்து கொடுத்து விட்டதால் மக்கள்கள் பலரும் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைத்து நபர்களையும் பாராட்டி வருகிறார்கள்.இதேபோல் இன்னும் எவ்வளவு பேர் நிதி உதவி தருகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.