sun tv overtaking vijay tv: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி கொண்டுதான் வருகிறது இந்நிலையில் அந்த சீரியல்களும் நிகழ்ச்சிகளும் மக்களுக்கு பிடிக்கிறதா இல்லையா என்றால் அது கேள்விக்குறிதான்.
இவ்வாறு இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் சீரியலும் சரியான அம்சம் இல்லாததாக இருந்தும் தற்போது டி ஆர் பி யில் முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் மற்ற அனைத்து சேனல்களும் இவர்களுக்கு பிறகு தான்.
ஆனால் சமீபகாலமாக சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தாண்டிவிட்டது. இதன் காரணமாக சன்டிவி ஆனது தன்னுடைய நிகழ்சிகளில் பல்வேறு மாற்றங்களை கொடுத்தாலும் அது எதுவுமே செல்லுபடியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மற்ற சீரியல்களை காட்டிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் மக்களுக்கு பிடித்த வண்ணம் இல்லாமல் போனதுதான் காரணமே.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகமெங்கும் ஊரடங்கு புதுப்பித்த நிலையில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் சீரியல் படபிடிப்பை நிறுத்தி வைத்ததன் காரணமாக தற்போது சன் டிவி புதிய புதிய திரைப்படங்களை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இதன் காரணமாக தற்போது சன் டிவியின் டிஆர்பி ரேட் ஆனது மறுபடியும் முதலிடத்தை பெற்று விட்டது. பொதுவாக சீரியல் விஷயத்தில் கூட சன்டிவி கேர்லஸாக இருக்கும் ஆனால் சினிமா விஷயத்தில் அவர்களை மிஞ்ச யாருமே கிடையாது என்ற வகையில் இந்த வளர்ச்சி உள்ளது.
ஆனால் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை எந்த திரைப்படத்தை போட்டார்களோ அதே திரைப்படத்தை தான் தற்போது வரை போட்டுக் கொண்டு வருகிறார்கள் இதன்காரணமாக ரசிகர்களும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.